பாண்டிருப்பு கடற்கரைக்கு தனியான மாநகரசபையா?

பாண்டிருப்பு கடற்கரைக்கு தனியான மாநகரசபையா?

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரை பிரதேசம் மாநகரசபையால் சுத்தம் செய்யப்படுவதுமில்லை, அங்கு காணப்படும் திண்மக்கழிவுகள் அகற்றப்படுவதுமில்லை. இப் பிரதேசத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளதுடன், பொழுதுபோக்கிற்காகவும் கடற்கரைக்கு பொதுமக்கள் வருவதுண்டு. ஆனால் இங்கு குவியும் குப்பைகள் அகற்றப்படாமலுள்ளன.

அருகிலுள்ள மருதமுனை கடற்கரை பிரதேசம், கல்முனை மாநகரசபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்படுவதுடன், திண்மக்கழிவுகளும் அகற்றப்படுகின்றன. ஆனால் பாண்டிருப்பு கடற்கரை கவனிப்பாராற்று கபணப்படுகின்றது. இதற்கு காரணம் கல்முனை மாநகர சபையின் இன ரீதியான பக்கச்சார்பான செயற்பாடா? பாண்டிருப்பில் உள்ள மாநகர சபை உறுப்பினர்களின் கவனயீனமா? அல்லது பாண்டிருப்புக்கு என தனியான மாநகர சபை உள்ளதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply