பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் வேளையில் பல கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் விதித்த வண்ணம் உள்ளன.

அது போலவே பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் விதிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்களை மீறியவகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின் மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிப்பது உறுதி செய்யப்படுவதுடன் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்பட வேண்டுமென்று அறிவிப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் ​நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மேலும் அனைத்து பஸ் உரிமையாளர்கள் சங்கங்களும் போக்குவரத்து சேவைக்கான சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளுக்கு உடன்பட்டுள்ளன.
அத்தோடு தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் மீறப்படுமாயின் தற்போதைய டெல்டா தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத் வேண்டி ஏற்படும்.

மேலும் பொது மக்களின் நலனே முக்கியமானது. அதனை கருத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார்.

Leave a Reply