யாழில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்.!

கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதாவது இன்று திங்கட்கிழமை இந்த போராட்டம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து கச்சேரியில் நிறைவடையும் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த போராட்டம் ஒவ்வொரு மாவட்ட ரீதியாவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு மன்னாரில் இந்த போராட்டம் நடைபெற்று முடிந்ததோடு இன்று யாழில் இடம்பெறவுள்ளது.

ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அரசாங்கம் கை விரித்ததன் காரணமாகவே இந்தப் போராட்டம் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply