டெல்லியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன!

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிக்காகவும், ஆலோசனை பெறுவதற்காகவும், தேர்வுகளுக்கான செய்முறை வகுப்புகளுக்காகவும் பாடசாலைக்கு வரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply