மோடி தலைமையில் கடல்சார் பாதுகாப்பு கூட்டம் இன்று!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெறும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) பேசவுள்ளார்.

காணொலி வாயிலாக நடைபெறும் குறித்த கூட்டத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொள்ளவுள்ளார். அதேநேரம் நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் காணொலி வாயிலாக பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது கடல்சார் குற்றங்கள், கடத்தல், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply