மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஓந்தச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
இந்நிலையில் ,மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளி கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மற்றுமொரு சடலத்தினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் இரு பிள்ளைகளின் தந்தையான(28) வயதுடைய தருமரெத்தினம் தர்மதாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்ட நாட்களாக குடும்ப தகராற்றில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அவரது வீட்டு முற்றத்தில் உள்ள மரத்திலிருந்தே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்குச் சென்ற அப்பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்