ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாண புதிய அதிபர் சங்கம் என்பன இணைந்து யாழில் வாகனப் பேரணி ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று யாழ் வீரசிங்க மண்டபத்தில் இந்த வாகன பேரணி ஆரம்பித்து கச்சேரியில் நிறைவு பெற உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீக்கு ,கொத்தலாவ சட்ட மூலத்தைக் கிழித்தெறி இலவசக் கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு எனும் எழுதிய வாசகங்களுடன் இந்த போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
அத்தோடு இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இதற்கான தீர்வு இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.