டோக்கியோ ஒலிம்பிக் இனிதே நிறைவு: பரபரப்பான இறுதி நேரத்தில் ஒரு பதக்கம் முன்னிலையில் அமெரிக்கா முதலிடம்!

நீண்ட தடை, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெறவிருந்த கோடைகால ஒலிம்பிக், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த ஜூலை 23ஆம் திகதி முதல் நேற்று வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

206 நாடுகள் பங்கேற்ற இத்தொடரில், 33 விளையாட்டுகளில் 339 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

பரபரப்பான இறுதிநேரத்தில் ஒரு தங்க பதக்கம் முன்னிலையில், பதக்க பட்டியலில் முதலிடத்துடன் அமெரிக்கா தொடரை நிறைவுசெய்துள்ளது.

அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தமாக 113 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தமாக 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்தை பிடித்தது.

27 தங்கம் 14 வெள்ளி, 17 வெண்கலம் என என மொத்தமாக 58 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தை பிடித்தது.

பிரித்தானியா 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தமாக 65 பதக்கங்களுடன் நான்காவது இடத்தை பிடித்தது.

ரஷ்யா 20 தங்கம், 28 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தமாக 71 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தது.

அவுஸ்ரேலியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்தது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக், அடுத்ததாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெறவுள்ளது.

Leave a Reply