பெண்ணிற்கு உடைகள் வழங்கியதை நிருபித்தால் பதவிவிலகத் தயார்!

பெண்களுக்கு ஆடைகள் வழங்கியதை நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்க தயார்..! – சரத் வீரசேகர

கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவருக்கு நான் உடைகளை கொண்டுசென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத்தயாராக உள்ளேன் என பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சனையை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார என்னைப் பற்றி அவதூரான கருத்துக்களை வெளியிட்டார். நான் பெண்ணொருவருக்கு உடைகளை கொண்டு சென்றேன் என்றும், பயணக் கட்டுப்பாடுகளை மீறி கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு இவ்வாறு உடைகளை வழங்கியதாக அவர் கூறியுள்ளார். ஆனால் என்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாது போனால் பெண்களின் பொருள்கள் உள்ளடங்கிய பொதியை தலையில் சுமந்துகொண்டு சபையில் ஐந்து நிமிடம் நிற்க முடியுமா? எனவும் கேள்வி? எழுப்பினார்.

இந்த விடயத்தில் நளின் பண்டாரவுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன். அதாவது குறித்த பெண்ணுக்கு நான் ஆடைகளை கொண்டு சென்றேன் என்பதனை நிரூபிக்க முடியுமென்றால் அல்லது என்னுடன் தொடர்புடையவர்கள் அதனை செய்துள்ளதாக நிரூபித்தால் நான் நாளைய தினமே எனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகின்றேன் என்றார்.

Leave a Reply