கிளிநொச்சி உருத்திரபுரம் புரீஸ்வரர் சிவாலயத்தின் கும்பாபிஷேகம்!

<!–

கிளிநொச்சி உருத்திரபுரம் புரீஸ்வரர் சிவாலயத்தின் கும்பாபிஷேகம்! – Athavan News

கிளிநொச்சி உருத்திரபுரம்  உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திர புரீஸ்வரர் சிவாலயத்தின்  பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது

வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருதிரபுரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா  நேற்று பகல் 10 32 முதல் 11 22 வரையான சுப நேரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது

கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6 மணி முதல் கிரிகைகள்  ஆரம்பமாகி  கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று இன்று மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது இதில்  அந்தணர்கள் சமய பெரியார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.


Leave a Reply