டாடா குழுமத்தின் வசமாகும் ஏர் இந்தியா விமான நிறுவனம்!

<!–

டாடா குழுமத்தின் வசமாகும் ஏர் இந்தியா விமான நிறுவனம்! – Athavan News

ஏர் இந்தியா விமான நிறுவனம் வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா ஏஸ்ஏடிஎஸ் சேவை வழங்கல் நிறுவனத்தின் 50 சதவீதமான பங்குகள் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதன் மூலமாக டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் எதிர்வரும் 3 ஆவது விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.

ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், டலேஸ் நிறுவனமும் கடந்த ஒக்டோபர் மாதம் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply