வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பெண் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (19.08) மாலை குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும் வவுனியா, குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply