சமூகத்திற்குள் டெல்டா பரவியுள்ளதா? சுகாதார அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்

டெல்டா வைரஸ் இதுவரை சமூகத்திற்குள் பரவவில்லையென சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

மேலும் முன்னரை விடவும் அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற போதிலும், டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் பரவவில்லை என அவர் கூறுகின்றார்.

சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்காது, கடந்த காலங்களில் செயற்பட்டமையே, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கான காரணம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் ஒன்று கூடியதாகவும், அதன் பெறுபேறுகளையே நாளாந்தம் அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

Leave a Reply