தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில், உலக உடற் பருமன் எதிர்ப்பு தினம் அனுஷ்டிப்பு! SamugamMedia

உலக உடற் பருமன் எதிர்ப்பு தினம் மார்ச் 04ஆம் திகதி தொடக்கம் மார்ச் 10ஆம் திகதி வரை சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் இன்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலும் உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி வரை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஆரோக்கியமான உணவு பழக்கம், உடற் திணிவுச் சுட்டி அளவிடல் மற்றும் உடற்பயிற்சியின் நன்மைகளை எடுத்துக்காட்டும் முகமாக இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில், வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply