யாழ் மாவட்டத்தில் பாணின் விலை தொடர்பில் விசேட அறிவிப்பு!SamugamMedia

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  அறிவித்திருந்தது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் பாணின் விலை 200 ரூபாவை தொட்டிருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply