அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி! SamugamMedia

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி திருத்தம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தது.

தொழில் ரீதியாக தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply