பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சுக்கு அனுப்பப்படுகின்றது கடிதம்! SamugamMedia

வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் தேர்தல் அச்சிடும் பணிகளுக்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு இன்று(புதன்கிழமை) கடிதம் அனுப்பவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தலை அச்சிடுவதற்கு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், நிதியமைச்சின் பதிலின் அடிப்படையில் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுக்கவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply