மகளிர் தினத்தில் கர்ப்பிணி தாய்மாருக்கு அடித்த அதிர்ஷ்டம்!SamugamMedia

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் பேஷாக்குப் பொதி இடை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் உடனடியாக அதனை  வழங்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கும் பேஷாக்குப் பொதி 2000 ரூபா இலிருந்து 4500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயம் எனவும் எனினும் மாத வருமானம் 50000 ரூபாய்க்கு குறைவாக உள்ள தாய்மார்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக அரச ஊழியர்கள் உட்பட பல தாய்மார்களுக்கு இந்த சலுகைப் பொதி வழங்கப்படாதுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணவீக்கம் அதிகரித்து வரும் தற்போதைய சந்தர்ப்பத்தில் இதுபோன்ற சலுகைக் குறைப்பு ஏற்புடையதல்ல எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்த மானியத்தை வழங்குவதற்கு மாதாந்தம் 675-700 மில்லியன் ரூபா செலவாகுவதாகவும் எனவும் இது வருடாந்தம் 8 பில்லியன் ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த 4500 ரூபா கொடுப்பனவை நாட்டிலுள்ள அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மகளிர் தினத்திலிருந்தோனும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply