யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறையினரால் சர்வதேச மகளீர் தின விழா முன்னெடுப்பு! SamugamMedia

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் வரலாற்று துறையினரால் இன்றைய சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு  விசேட நிகழ்வுகள் இன்று நண்பகல்  1:30 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் வரலாற்றுதுறையின் தலைவர் பேராசிரியர் க.அருந்தவராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது வரலாற்று துறை மாணவர்கள்,விரிவுரையாளர்களால் மகளீர் தினம் சார்ந்து விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது .இதேவேளை அண்மையில் கலைப்பீடத்தின் சட்டத்துறை தலைவராக தெரிவுசெய்யப்பட்ட கோசலை மதன் மற்றும் ஊடகத்துறை விரிவுரையாளர் திருமதி கிருத்திகாவினால் பால்நிலை ஒப்புரவு சமத்துவம் மற்றும் மகளீர் சார்ந்து விசேட உரை ஆற்றப்பட்டது.

இதன் பொழுது பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ் .ரகுராம்,யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் க.அருந்தவராஜா, வரலாற்றுதுறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,உதவி விரிவுரையாளர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply