இலங்கைக்கான வருமானத்தை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா மற்றும் சிங்கப்பூர் தீவிரம்: முக்கிய அமைச்சர் தகவல்!SamugamMedia

இலங்கைக்கான வருமானத்தை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா, மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் துறைமுகங்கள், எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தெரிவித்திருந்தார்.

துறைமுகம் போன்ற துறைகளுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுக்கது பொருந்தாது என்றும் அவர்கள் போராட்டங்களை தவிர்க்கவேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திரந்தார்.

குறிப்பாக துறைமுக ஊழியருக்கு ஒரு இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பளம், மூன்று வேளை உணவு மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் துறைமுக ஊழியர்கள் வரி அதிகரிப்பு தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாதெனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா காட்டமாக தெரிவித்திருந்தார்.

கடந்த முறை இவ்வாறு துறைமுக ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால், இலங்கைக்கு வருகை தந்த 17 கப்பல்கள் வேறு நாடுகளை நோக்கிச் சென்றிருந்ததாகவும் இதனால் நாட்டுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களை மாற்ற முடியாது. இதுபற்றி, அவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply