கச்சதீவு பேச்சுவார்த்தையின் பின்னர் அத்துமீறல்: கடற்தொழில் அமைச்சரின் அலுவலகம் முடக்கம்.??SamugamMedia

கச்சதீவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் தொடர்ந்தால் இந்திய தூதரங்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சரின் அலுவலகங்கள் முடக்கப்படுமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கச்சதீவில் இந்த விடயங்கள் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டிருந்தாகவும் இந்த தீர்மானத்தில் இருந்து தாம் பின்னவாங்கப்போவதில்லை என்றும் சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றினைந்து நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தபோது இதனை செய்வதாகவும் ஆனால் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் தனக்கு நாடாளுமன்றத்தில் பெருமான்மை பலவேண்டும் என்றும் குறிப்பிட்டதாக சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை காலமும் மீனவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றும் ஆனால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர் தமது கலந்துரையாடல்களில் கலந்து கொண்டதாகவும் இதனை தாம் வரவேற்பதாக சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply