தனித்தனியாக வீடுகளுக்கு வந்து அச்சுறுத்தும் இராணுவப் புலனாய்வாளர்கள்; நிம்மதி இல்லை! உறவுகள் கவலை SamugamMedia

சுதந்திரமான மகளீர் தினம் என சர்வதேச நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்ட போதும் இலங்ககையில் சிறுபான்மை பெண்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்பாகவுள்ள சுற்றுவட்டப்பாதையில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் போது இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த போராட்டங்களை கூட பொலிசார் மூலம் தாக்குவதாகவும் நீதாரை பிரயோகங்களை பியோகிப்பதாகவும் இதனை விடவும் இராணுவ புலனாய்வாளர்கள் ஒளிப்படங்களை எடுத்து தொடர்ந்தும் அச்சுறுத்துவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் தமது பிள்ளைகள் மற்றும் தமது உறவுகள் பயந்த நிலையில் காணப்படுவதாக தெரிக்கின்றனர். 

வீதிகளில் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை என்றும் தமிழ் மக்களுக்கான நீதியை இலங்கையிடம் கேட்ட போது கால அவகாசங்கள் மூலம் அதனை இழுத்தடிப்பு செய்வதாகவும் எனவே தான் இன்று தாம் சர்வதேச நாடுகளிடம் தமக்கான நீதியை கோரி நிற்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

Leave a Reply