நோய் உள்ளதா என்பதை வாட்ஸ்அப் மூலம் அறியலாம் – இலங்கையில் புதிய வசதி! SamugamMedia

தொழுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் வாட்ஸ்அப் மூலம் தோலில் உள்ள தழும்புகளின் புகைப்படத்தை அனுப்பி உண்மையை உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இது தொடர்பான புகைப்படத்தை 0754434085 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறு தொழுநோய் பிரச்சார பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

அவ்வாறான புகைப்படங்கள் அனுப்பப்படும் நபர்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

தற்போது வீடுகள் மட்டத்தில் தொழுநோயாளிகளை கண்டறியும் வேலைத்திட்டம் உள்ளதுடன், முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஆண்டு, இலங்கையில் சுமார் 1,400 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

அதில் 246 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரசார இயக்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply