இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு சட்டக் கற்கைகள் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அண்மையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது குறித்த குழு இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
சட்டக்கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதன் நோக்கம் என்ன என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் பிரசன்னமாகியிருந்த சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும், தங்கள் தாய்மொழியில் பரீட்சையில் தேர்ச்சி பெறுவது தங்களது தொழில் திறமையை வெளிக்காட்ட தடையாக இருக்காது என நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை அறிவித்துள்ளது.
முதன்மை நீதிமன்ற நடவடிக்கைகளில் முக்கியமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் பயன்படுத்தப்படுவதாக குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
கிராமப்புறங்களில் ஆங்கில வழிக் கல்வி இல்லாதது, ஆங்கிலத்தில் பரீட்சை நடத்துவது அடிப்படை உரிமை மீறல் என கவுன்சிலர்கள் அங்கு தெரிவித்திருந்தனர்.
அதன்படி, ஒரு மாணவர் தனது தாய்மொழியில் பரீட்சையை எதிர்கொள்ளும் சுதந்திரம் தேவை என அந்தக் குழு கருத்து தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.