யாழ் – கொழும்பு விமான சேவை தொடர்பாக ஆராய்வு! SamugamMedia

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர். இந்த சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருகின்றோம்.

மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

மேலும் யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றார்.

Leave a Reply