அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தவில்லை:பிரதமர் அறிவிப்பு!SamugamMedia

அரசாங்கம் ஊடகங்களை கட்டுப்படுத்த எண்ணவில்லை என்றும் ஆனால் ஊடகங்கள் அதன் நெறிமுறை தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர், போலிச் செய்திகள், தவறான தகவல்களை உறுதிப்படுத்தி , உண்மையான செய்திகளை மாத்திரம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களினுடையதாகும் என  தெரிவித்தார்.

போலி செய்திகளை எவ்வாறு கண்டறிவது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு எனவும் மக்கள் இவை தொடர்பில் ஆர்வத்துடனிருக்க வேண்டும் என்பதோடு அவர்கள் படிக்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை தீவிரமாக ஆராய வேண்டும் என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக ஊடகங்களில் செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன் செய்தி பற்றி உறுதி செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மக்களுக்கு தகவல்களை வழங்கும் அதே வேளையில், தவறான செய்திகளை கண்டறிந்து நிராகரிப்பது ஊடகங்களின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply