யாழில் வாள்வெட்டில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினரை பார்வையிட்ட சித்தார்த்தன் எம்.பி!SamugamMedia

நேற்றையதினம் வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினரை, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியோடும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.

நேற்று இரவு ஆலய திருவிழாவிற்கு சென்று வீடு திரும்பிய பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கொள்ளையர்கள் வழிமறித்து நகைகளை திருடமுற்பட்ட போது நடந்த இழுபறியில் கொள்ளையர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி கணவனும் மனைவியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதலில் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினரான இராசேந்திரம் செல்வராசா வயது 59 அவரது மவைியான செல்வராசா கமலாதேவி வயது 49 ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர்.

Leave a Reply