சர்வதேச தொழிலதிபர் சுபாஸ்கரனுக்கும் அங்கஜன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு!SamugamMedia

சர்வதேச தொழிலதிபர் திரு. Dr. அ. சுபாஸ்கரன் அவர்களை நட்புரீதியாக சந்தித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகம் மூலமாக இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இந்த சந்திப்பு குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றும் உதவிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இதன்போது பேசிக்கொண்டோம்.

அரசியல் ரீதியாகவும், தன்னார்வ ரீதியாகவும், முதலீடுகள் ரீதியாகவும் எமது மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்ய வேண்டும் என்ற பெருவிருப்பம் அவரிடம் உள்ளது.

தற்போதும் விளம்பரங்கள் இன்றி அவர் எம்மக்களுக்கு ஆற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நன்றியையும் இச்சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தேன் – என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply