வெடியரசன் கோட்டை விவகாரம்: தமிழர்களின் வரலாற்று ரீதியான உண்மைகளை சிதைக்கும் நடவடிக்கை! SamugamMedia

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலுள்ள புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெடியரசன் கோட்டையானது புராதன பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகளைக் கொண்ட பகுதியென அடையாளப்படுத்தி, அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையினரால் இந்த பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வரலாற்று ரீதியான உண்மைகளை சிதைக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களை ஆதாரங்களுடன் சர்வதேச நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் மற்றும் தூதரங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply