இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட இந்திய மீனவர் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது- அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!SamugamMedia

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் இன்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இன்று மாலை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் மாலை 03:30 மணியளவில் வடமராட்சி வடக்கு கடற்றொழலாளர்களுடன்கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், மீனவர்களது பிரசினை தொடர்பில் ஆராய்ந்தார்.
இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
முதற்கட்டமாக இந்திய மீனவர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக இராஜாங்க அமைச்சர் திரு முருகன், இத்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பஜாக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் இராஜ தந்திர ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தித் தான் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை அவதானித்துச் செல்லட்டும். அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply