எங்கள் கடல் வளத்தை தரைவார்த்துக் கொடுப்பதை இலங்கையர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் – பூந்தளிர் மாவட்ட பெண்கள் சம்மேளனத்தின் தலைவி! SamugamMedia

எங்கள் கடல் வளத்தை  தரைவார்த்துக் கொடுப்பதை  இலங்கையர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என பூந்தளிர் மாவட்ட பெண்கள் சம்மேளனத்தின் தலைவி ஆர். பிரியா  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் இந்தியா மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது எங்கள் கடல் வளம் இதை தரைவார்த்துக் கொடுப்பதை எமது இனமும் ஒட்டுமொத்த இலங்கையரும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ் விடயத்தை கிளிநொச்சி மீனவர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

2 நிமிடங்கள் கூட அனுமதிக்க முடியாது என நாம் வாதாடி பெற்ற வெற்றியை 2 நாட்கள் அனுமதி வழங்கவுள்ள விடயத்தை   தேவையற்ற விடயமாகவே நாம் கருதுகின்றோம். 

எனவே எந்தவித காரணங்களுக்காகவும் இவ் நடவடிக்கைக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை -என்றார்.

Leave a Reply