யாழில் விசமிகளின் செயல்; பத்து படகுகள் தீக்கிரை – பல இலட்சம் ரூபா இழப்பு! SamugamMedia

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர் கோவில் பகுதியில் பத்து படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் மேற்கு நாகர் கோவில் எனும் முகவரியிலுள்ள அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்து படகுகளுக்கு இனந்தேரியாத நபர்களினால் இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகுகள் தீயில் எரிந்து நாசயாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply