இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் மற்றும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் லிமிடெட்டின் தலைவர் ஷிர்காந்த் மாதவ் வைத்யா ஆகியோர் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரும் தமது பயணத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனின் செயல்பாடுகளை அந்த நாட்டின் பெற்றோலியம் மற்றும் இயற்கை அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது.
கடந்த ஆண்டின் முற்பகுதியில், லங்கா ஐ.ஓ.சி, பிஎல்சி மற்றும் இலங்கை அரசின் கீழ் வரும் சிலோன் பெற்றோலியம் கோர்ப்பரேஷன் ஆகியன இணைந்து டிரின்கோ பெற்றோலியம் டேர்மினல் என்ற கூட்டு முயற்சியை உருவாக்கின.
இதனைடுத்து குறித்த நிறுவனம் தனது வலையமைப்பை மேலும் 50 நிரப்பு நிலையங்களுடன் விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அண்மையில் அனுமதியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.