ஆஸ்திரேலியாவுக்கு பறக்கிறார் ஜனாதிபதி ரணில்…!

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாரம் ஆஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

அதன் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 08 மற்றும் 09ம் திகதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அந்நாட்டு தலைவர்களுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளார்.

Leave a Reply