ஒட்டகச்சிவிங்கி சிலை உடைந்து வீழ்ந்ததில் 8 வயது சிறுவன் பரிதாப மரணம்..!

ஹெட்டிபொல – திக்கலகெதர பிரதேசத்தில் நேற்றையதினம் கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே குழந்தையின் உடலில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply