குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை – வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல்  வழிமறித்து, அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து  மிரட்டி நகைகளை பறித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணித்த சமயம் வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர்,

குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில்  வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply