யாழில் ஒட்டப்பட்ட அநுரவின் சுவரொட்டியால் வெடித்த சர்ச்சை!

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படம் உள்ளடங்கிய சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொள்ளும் கூட்டமானது இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் முகமாக இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிக்கு வந்த பின்னர் வாகனங்களில் இருக்கும் அலங்காரங்கள், சுவரொட்டிகள் அனைத்தையும் கிளீன் சிறீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தி வரும் நிலையில்,

அவரது கூட்டத்துக்கான அழைப்பு சுவரொட்டிகள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தையும் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *