
அண்மையில் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு சுற்று நிருபம் நாட்டில் பேசு பொருளாகியிருக்கிறது. (தற்போது அதனை இடைநிறுத்தியுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது). தலை எது? வால் எது? என்று தெரியாமல் பலரும், பற்பல கருத்துக்களை வழமை போல தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர். கொரோனா ஜனாசா எரிப்பு, கோத்தா வழிமுறை, மனித உரிமை மீறல், முஸ்லிம்களை வேண்டும் என்றே இலக்கு வைக்கும் நடவடிக்கை .. இத்தியாதி இத்தியாதி என்று ஆளுக்காள் தங்களது கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

