திடீரென வீசிய பலத்த காற்று: வாவிக்குள் பாய்ந்த ஆட்டோ..!

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(27) இடம்பெற்றுள்ளது. 

பிரதேசவாசிகள், உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் மற்றும் மற்றுமொருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு வாவியில் நீராடச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தால் முச்சக்கரவண்டியின் சில பகுதிகள் சிறு சேதமடைந்துள்ளதுடன் தெய்வாதீனமாக உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *