நிலவும் சீரற்ற காலநிலை: நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்கள் பாதிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இன்று காலை வேளையில், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ப்ளக்பூல் சந்தி, வெண்டிகோனர், நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் , நோட்டன்பிரிஜ் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது , இதனால் குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்மை  சுட்டிக்காட்டதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *