
தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது என தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தாம் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ஆணையளித்தது.





