வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மாநகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளை திறம்பட கொண்டு செல்வதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை கலைந்து அவர்களுக்கான ஒதுக்கீடுகளையும் சீரான முறையில் வழங்குவது தொடர்பாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று வுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடி இருந்தனர்.
இதன்போது மாநகர சபையின் முதல்வர் உட்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருந்ததோடு கட்சிகளின் சார்பில் தமிழரசு கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிறிரெலோ கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ப. உதயராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் க. துளசி, தமிழ் காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். தவபாலன், அகில இலங்கை மக்கள் சக்தி சார்பில் அதன் பங்காளி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பல்வேறு முடிவுகள் சாதகமாக எட்டப்பட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.










