பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா விபத்தில் பலி

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று (13) காலை 9.00 மணியளவில் துயரச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாத்தளை கிளையிலிருந்து கொழும்பு நோக்கி லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற லொறி, வீதியில் சென்றிருந்த வயோதிபர் மீது மோதியதில் அவர் லொறியின் சில்லில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் தனது பேத்தியை பாலர் பாடசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட சிறுமி பலத்த காயங்களுடன் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply