லொஹான் ரத்வத்த ஏனைய அமைச்சுப் பொறுப்பகளில் இருந்து விலகவில்லை

சிறைச்சாலை மறுசீரமைப்பு பதவியிலிருந்து விலகிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஏனைய அமைச்சுப் பொறுப்பகளில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் சார்ந்த தொழிற்சாலை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விசாரணைகள் முடியும்வரை லொஹானின் அமைச்சுப் பொறுப்புகள் இடைநிறுத்தப்படவேண்டுமென பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கோட்டபாயவையும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply