
கொழும்பு, ஏப் 16
இத்தாலியின் மிலானோ நகருக்கான கொன்சியூலர் ஜெனரலாக சிங்கள திரைப்பட நடிகர் பந்து சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இவர் இத்தாலி – மிலான் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதுவராக நியமிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் பதவியில் இருந்த இலங்கையின் மூத்த பெண் பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்ரமசிங்க அண்மையில் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.





