2 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொதி மன்னாரில் மீட்பு

மன்னார் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைத்திருந்த 81 கிலோ கஞ்சாவை கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டு எடுத்துச் செல்லும் நோக்கில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த சமயமே இன்று காலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 2 கோடி ரூபா எனத் தெரிவித்துள்ள கடற்படையினர், இவற்றை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply