
நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் அவசியம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆழமாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




