கோட்டா – மொட்டு எம்.பிக்கள் இன்று முக்கிய சந்திப்பு

நாட்டில் அரசியல் நெருக்கடி சூடுபிடித்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு இன்றும் நடைபெற்றுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலகி இடைக்கால அரசு அமைய வழிவிடும் வகையிலான யோசனை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. இன்றும் அது பற்றி பேசப்படும்.

நாடாளுமன்றத்தில் 113 என்பதைவிடவும், மக்களின் கோரிக்கையே எமக்கு முக்கியம்” – என்றார்.

Leave a Reply