மருந்துகளின் விலை 40 சதவீதத்தால் அதிகரிப்பு: விசேட வர்த்தமானி வெளியீடு

கொழும்பு, ஏப்ரல் 30: 60 வகையான மருந்துகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து சுகாதார அமைச்சகம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையொன்றின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பரசிடமோல் மாத்திரையொன்றின் விலை சுமார் 3 ரூபாயாக இருந்தது.

அத்துடன், இன்சுலின் நோயாளிகளுக்கான சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *