மகிந்த பிரதமர் பதவியை இராஜினாமா செய்யலாம்! நாளை விசேட அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என தேரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply